FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 April 2016

4 வயது சிறுமி புத்தக சுமையால் தவறி விழுந்து பலி

மும்பை: மும்பையில் 4 வயது சிறுமி புத்தக பையின் சுமையால் பால்கனியிலிருந்து கால் தவறி விழுந்ததில் உயிரிழந்தது.
மும்பை பல்கார் மாவட்டம் நல சோபரா பகுதியை சேர்ந்தவர் சிறுமி சரிகா சிங். அப்பகுதியில் உள்ள கோல்ட் பேலஸ் அப்பார்ட்மெண்டில் நான்காவது மாடியில் பெற்றோருடன் வசித்து வந்தார். புத்தக பையுடன் பால்கனியில் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். வீட்டிலிருந்து அழைப்பு குரல் கேட்டதும் ஓடினார். அப்போது புத்தக பையின் சுமையால் பின் இழக்கப்பட்டு பால்கனியிலிருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment