FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 April 2016

ஜூலை 31-க்குள் மூன்றாண்டு சொத்து விவரங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கெடு

மத்திய அரசு ஊழியர்கள் தங்களது கடந்த மூன்றாண்டு சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
2013-ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்
டும் என்ற விதிமுறை உள்ளது.


அதன்படி, சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இதுவரை இந்த சொத்து விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பல முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான காலக்கெடு கடந்த 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் கடந்த மூன்றாண்டு (2014, 15, 16) சொத்து விவரங்களைத் தனித்தனியாக வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தங்களின் பணக் கையிருப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு வங்கி வைப்புத் தொகைகள், பத்திர முதலீடுகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களும் இருத்தல் அவசியம்.
மேலும், தங்களின் இரண்டு மாத ஊதியத்துக்கும் அதிகமாக அல்லது ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட வீட்டு உபயோகப் பொருள்கள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

தங்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் அவர்கள் குறப்பிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment