அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர்.
இதுகுறித்து ஆட்சியர் டிபி.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1)ன் படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு அப்பள்ளியின் நுழைவுநிலை (எல்.கே.ஜி அல்லது 1 ஆம் வகுப்பு) வகுப்புகளில் குறைந்த பட்சம் 25 இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2016-17 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்க்க விரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுலவர் அலுவலகங்கள், அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மே 3 முதல் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவண நகல்களின் இணைப்புகளுடன் மே 18 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைப் பெற்ற அலுவலகத்திலோ அல்லது தமது குழந்தையினை சேர்க்க விரும்பும் பள்ளி அலுவலகத்திலோ ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment