FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 February 2016

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில் ரூ.251க்கு ஸ்மார்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல் நிறுவனத்தில் சுமார் 7 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக நிறுவனர் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.


ரூ.251க்கு ஸ்மார்ட்போன் என்றதும், அப்படி என்னதான் இருக்கும், எப்படி ரூ.251க்கு ஸ்மார்ட்போன் என பல்வேறு உந்துதல்கள் மக்களிடையே ஏற்பட்டது. அதன் விளைவு, ஸ்மார்ட் போன் முன்பதிவு இணையதளத்தில் ஒரே நேரத்தில் 6 லட்சம் பேர் நுழைந்து, இணையதளமே முடங்கிப்போனதுதான். பிறகு ஒரு வழியாக இணையதளம் சீர் செய்யப்பட்டு முன்பதிவு நடைபெற்றது. இது குறித்து பேசிய மோஹித், இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் எங்கள் நிறுவனத்தின் ஃப்ரீடம் 251 செல்போனைவாங்க முன் பதிவு செய்துள்ளனர்.


 இவற்றில் முதல் தவணையாக ஆன்லைன் மூலம் 25 லட்சம் பேருக்கும், கடைகளில் 25 லட்சம் பேருக்கும் வரும் ஜுன் மாதம் 30ம் தேதிக்குள் ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்கப்படும். செல்போன் உரியவரிடம் சேரும் வரை, அவர் செலுத்திய பணத்தை நாங்கள் தொடமாட்டோம். வங்கிலேயே டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

No comments:

Post a Comment