கணிதம் பாடம் குறித்து பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியம் கூறுகிறார் : கணிதத்தில் அனைவரும் எளிதாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியும். பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களை ஒரு முறைக்கு பலமுறை போட்டு பாருங்கள். எந்தெந்த பாடத்துக்கு எத்தனை மதிப்பெண் என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் தினமலர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தில் விரிவாக உள்ளது.
சமச்சீர் கல்வி திட்டத்தில் 10ம் வகுப்புக்கு அணிகள் பகுதி புதியது. கேள்விகளை திட்டமிட்டு தேர்வு செய்வதும், வினாக்களுக்கு பார்முலா எழுதுவதும் முக்கியம். கிராப் பயன்பாடு மிக முக்கியம். பென்சில் பயன்படுத்தி எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாது.
ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் வரிசையாக வரும்படி, எண் இட்டுக் கொண்டு பதில் மட்டும் எழுதுங்கள். இடம் விட்டு, திருத்தும் ஆசிரியரை டென்சன் ஏற்படுத்தாமல், அடித்தல், திருத்தல் இல்லாமல் தெளிவாக பதில் எழுத வேண்டும். இரண்டு மார்க் கேள்விக்கு படம் வரைய வேண்டும் என்றால் வரைய வேண்டும். பார்முலா கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நிரூபிக்க என கேட்கப்படும் கேள்வியை தேர்வு செய்வது நல்லது; ஏனெனில், விடை அவர்களே கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு விடையிலும் அலகு குறிப்பிட வேண்டும்; அதற்கும் மதிப்பெண் உண்டு. பெரிய வினாக்களுக்கு ஸ்டெப் மார்க் வழங்கப்படும்.
வினாத்தாளில் பார்முலாவுக்கு மதிப்பு கொடுத்திருந்தால், அதை பயன்படுத்த வேண்டும். கணக்கு தேர்வை பொறுத்தவரை நமக்கு நன்கு தெரிந்ததுதானே என எழுதாமல் ஒவ்வொரு ஸ்டெப்பாக எழுதி வாருங்கள். ஒரு மதிப்பெண் வினாக்களை 15 நிமிடங்களிலும், 2 மதிப்பெண் வினாக்களை 30 மதிப்பெண்களும், ஐந்து மார்க் வினாக்களுக்கு தலா 10 நிமிடம் வீதம் ஒரு மணி நேரம், கிராப் 15; ஜாமெண்ட்ரி 15 என 2.15 மணி நேரத்தில் எழுதும் வகையில், திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தற்போது பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகள், திருப்பு தேர்வுகளில் முயற்சித்து, திட்டமிடுங்கள். மீதமுள்ள நேரத்தில் எழுதியதை திரும்பி பாருங்கள். டென்சன் இல்லாமல், குழப்பம் இல்லாத கேள்விகளை தேர்வு செய்து, பதில் எழுதினால் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எளிதாக பெற்று விடலாம்.

No comments:
Post a Comment