படிப்பு என்பது பள்ளி அல்லது கல்லூரி கல்வியை மட்டும் குறிப்பதில்லை.அங்கே வாங்கும் சான்றிதழ்களும், பட்டங்களும் மட்டுமே படிப்பின் எல்லைஇல்லை. அது ஒரு சிறு பகுதிதான். உங்களின் வாழ்க்கையை ஏனோதானோஎன்று நகர்த்துவதற்கு மட்டுமே அந்த தகுதிகள் பயன்படும். அதேசமயம்நீங்கள் இந்த உலகில் ஒரு சிறந்த, பெயர்பெற்ற மனிதராக மற்றும் வெற்றிகரமான மனிதராக வர வேண்டும்என்றால் நிறைய படிக்க வேண்டும்.
நீங்கள் உலகில் வெற்றிபெற்ற பல மனிதர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களின்வாழ்க்கையை நீங்கள் பார்த்தால், அவர்கள் அதிகம் படித்திருப்பார்கள். இங்கே படிப்பு என்பதுகல்வித்தகுதியை குறிப்பதல்ல. பலவிதமான புத்தகங்களை படிப்பதை குறிக்கும். புத்தகங்களேஉங்களின் சிறந்த நண்பர்கள் என்ற புகழ்பெற்ற வாக்கியம் பலரும் அறிந்ததே. ஆனால் அந்தவாக்கியம் மாணவர்களுக்கு ஒரு தாரக மந்திரம். ஏனெனில், அவர்களை வாழ்வில்உயர்த்துவதற்கு புத்தகங்களை விட யாரும் உதவ மாட்டார்கள்.
உலகில் சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் அனைவரும் முதலில் நல்லபடிப்பாளிகள். அவர்கள் விரும்பி படித்த புத்தகங்கள்தான் அவர்களை அந்த நிலைக்குஉயர்த்தியுள்ளது. அதேசமயம் தயவுசெய்து தரமான புத்தகங்களை தேடி படிக்க வேண்டும்.ஏனெனில் பொருந்தாத புத்தகங்கள் உங்களின் சிந்தனையையே மழுங்கடித்துவிடும்.
மட்டமான நாவல்கள் மற்றும் பிக்ஷன் புத்தகங்களை தவிர்க்க வேண்டும். சினிமா கிசுகிசுமற்றும் ஆதாரமின்றி, ஏதேதோ செய்திகளை வெளியிடும் புத்தகங்களையும் கண்டிப்பாகதவிர்க்க வேண்டும். நல்ல விஞ்ஞானம், வரலாறு, தத்துவம், மருத்துவம், இலக்கியம், அரசியல்உள்ளிட்ட பல துறைகளின் புத்தகங்களை படிக்கலாம். மேலும், பல புகழ்பெற்ற மனிதர்களின்சுயசரிதையையும் படிக்கலாம். நமது பகுதியில் உள்ள நூலகத்தை முழு அளவில் பயன்படுத்திகொள்ளலாம். புத்தகங்களை படித்து பழகிவிட்டால், அதிலிருந்து மீள முடியாது.
பல நல்ல புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதற்காகவே, ஒரு நண்பர் குழுவை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதன்மூலம் ஒரு புத்தகத்தை வாங்க பலபேர் பணத்தை பகிர்ந்துகொண்டு புத்தகத்தை வாங்கி,அதை ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி படிக்கலாம். ஒரு மனிதனுக்கு பெரிய படிப்பு தகுதிஇல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால், அவர் சிறந்த புத்தகங்களை வாசிக்க பழகி விட்டால், அவரின்நிலைமையே மாறிவிடும். தன்னம்பிக்கை அதிகரித்து, சிந்தனை மேம்பட்டு ஒரு சிறந்த மனிதராக பரிணமிக்கமுடியும்.

No comments:
Post a Comment