FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 November 2015

ஜாக்டோ அமைப்பாளர் ஜாக்டோ பொறுப்பாளர்களே வணக்கம்

நீங்கள் எங்களுக்கு பலன்களை வாங்கி தராவிட்டாலும் அரசாங்கம் போல் வயிற்றில் அடிக்காதீர்கள்..... இதுவரை உங்களை நம்பி ...சொன்னபடி எல்லாம் ஆடினோம். உங்கள் முடிவால் எங்கள் இதயம் வலிக்கிறது. எங்கள் புலம்பல் வலிகள் உங்கள் செவிகளில் விளவில்லையா... அரசின் அடக்குமுறை களுக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா? இல்லை தங்களுக்கு அதிகமான பாதிப்பு இல்லை ஒதுங்குகிறீர்களா? இல்லை கண் துடைப்புகாக போராட்டம் அறிவிப்புகள் நடக்கிறதா? ஜாக்டோ நிர்வாகிகளே.. இவர்கள் வாழ 5200+2800+750+DAபோதும் என நினைக்கிறீர்களா? விடுமுறையில் போராட்டம் என்பது வெற்றுப்போராட்டமே தவிர வெற்றி போராட்டம் அல்ல. உங்களது நிலைதான் என்ன? வெளிப்படையாக கூறுங்கள்.

நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை... 1965-70 களில் மே மாதம் ஊதியம் இல்லை அடிப்படை ஊதியம் என்று ஏதும் இல்லை. இன்னும் அனுபவிக்கும் எல்லா சலுகைகளும் நம்முன்னோரளித்த போராடி பெற்றுத்தந்த உரிமைகள். அதை இழந்து விடாமல் காப்பது நம் கடமை இல்லையா. விடுமுறை நாட்களில் போராட்டம் என்பது காலம் கடத்தும் இழிச்செயல் ஆகாதா.?

ஒன்று பட்டு நிற்கிறோம் போராட. நீங்களும் ஓங்கி அடிப்பது ஞாயமா? ஜாக்டோ நிர்வாகிகளே.... கொஞ்சம் வலிமையான போராட்டத்தை துவக்குங்கள் இல்லை இடைநிலை ...? நாசமா போகட்டும் என்று விட்டுவிடுங்கள்............


No comments:

Post a Comment