FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 October 2015

நடிகர் சங்க தேர்தல் : விஷால் அணி வெற்றி!!!!!!

சென்னை : நடிகர் சங்க தேர்தலில்,
தலைவர், பொதுச்செயலர் மற்றும்
பொருளாளர் பதவிக்கு
போட்டியிட்ட, நாசர், விஷால்
மற்றும் கார்த்தி ஆகியோர் வெற்றி
பெற்றனர்.
நடிகர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்று,
சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார்
பள்ளியில் நடந்தது. தேர்தல் அதிகாரியாக, ஓய்வு
பெற்ற நீதிபதி பத்மநாபன் செயல்பட்டார். நடிகர்
சங்கத்தில் ஓட்டு போட தகுதி உள்ளவர்களின்
எண்ணிக்கை, 3,139. இதில், 17ம் தேதி மாலை
வரை, 934 தபால் ஓட்டுகளில், 783 ஓட்டுகள்
பதிவாகின. சென்னையில் வசிப்பவர்களுக்கும்,
நேரடியாக ஓட்டு போட விரும்பியவர்களுக்கும்,
நேற்று காலை, 7:00 மணி முதல், 5:00 மணி
வரை நடந்த ஓட்டுப்பதிவில், 1,824 ஓட்டுகள்
பதிவாகின. 10 ஆண்டுகளுக்கு பின், நடிகர்
சங்கத்திற்கு நடந்த தேர்தல் பெரும் வரவேற்பை
பெற்றது. நடிகர், நடிகையர் பலர், உற்சாகமாக
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர். வேதாளம்
படப்பிடிப்பின் போது காலில் காயம் பட்டதால்,
நடிகர் அஜீத்குமாரும், அவரது மனைவி
ஷாலினியும் ஓட்டு போட வரவில்லை. நடிகர்
அரவிந்தசாமி, நடிகையர் தமன்னா, ஹன்சிகா,
கமல் மகள் ஸ்ருதி ஹாசன், இலியானா உள்ளிட்ட,
532 பேர், ஓட்டு போடவில்லை.

No comments:

Post a Comment