FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 October 2015

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நிதித்துறை! தினமலர் டீ கடை பெஞ்சு

கஜானாவுல காசு இல்லன்னு கை
விரிச்சிட்டாங்களாம்ங்க...'' என பெஞ்சில்
அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாருக்கு யார் சொன்னாங்க வே... மொட்டையா
சொல்லுதீரு...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''சமீபத்துல, 15 அம்ச கோரிக்கைக்காக,
ஆசிரியர்கள் போராட்டம்
நடத்துனாங்க... இதுல 2004க்குப் பிறகு பணிக்கு
சேர்ந்த ஆசிரியர்களுக்கு, அவங்க தொகுப்பூதிய
காலத்துல, வேல செஞ்ச நாட்களை, சீனியாரிட்டி
கணக்கில் எடுத்து பணி வரன்முறை
செய்யணும்னு ஒரு கோரிக்கைங்க...
''இதை கேட்ட கல்வி அதிகாரிகள்,
நிதித்துறையில் கலந்து பேசுவதற்கு பைல்
குடுத்தாங்க... அதுக்கு, நிதித்துறையில
கைவிரிச்சு பைலை வாங்க மறுத்துட்டாங்க...
பணி வரன்முறைக்கு, 400 கோடி ரூபா கூடுதல்
செலவாகும்... 'இதுக்கு அரசுக்கு மனசு
இருக்கு, ஆனா கஜானாவுல காசு இல்லே'ன்னு
கறாரா சொல்லிட்டாங்க...'' என்றார்
அந்தோணிசாமி.

No comments:

Post a Comment