FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 October 2015

தொடர் பயிற்சிகளால் ஈராசிரியர் பள்ளிகளில், கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப் படுகிறது

அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார
அளவில், குறுவட்டார அளவில் நடத்தும்
பல்வேறு பயிற்சிகளில்
ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள
வேண்டும். பயிற்சி என்பது தேவையை ஒட்டி
உண்மையிலேயே ஆசிரியரிடமிருந்து கோரிக்கை
வந்தால் வழங்குவதில் தவறில்லை. புதிதாகப்
பணியில் சேர்ந்தவர்க்கு வேண்டுமானால்
கட்டாயம் வழங்கலாம். ஆனால், ஒதுக்கப்பட்ட
நிதியைச் செலவு செய்தே ஆக வேண்டும்
என்பதற்காக, ஆண்டுதோறும் அரைத்த
மாவையே அரைப்பதுபோல் தன்சுத்தம்,
பல்சுத்தம், உடல்நலம், கை கழுவுதல்,
உடற்பயிற்சி, கலை மற்றும் கைவினைப்
பொருட்கள் தயாரித்தல், வாசித்தல், எழுதுவதில்
மேம்பாடு; போன்ற தலைப்புகளில்
சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வர்.

No comments:

Post a Comment