FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 October 2015

மத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்கநிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:


தலைமைச் செயலகத்தில் 1,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், கணினி உள்ளிட்ட சில பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள்.1992-இல் மத்திய தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு இணையாக, தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு அடிப்படை ஊதியமானது ரூ.1,640-ஆக உயர்த்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டு மத்திய அரசு உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்திய நிலையில், தமிழகத்திலும் அடிப்படை ஊதியமானது ரூ.6,500-ஆக அதிகரிக்கப்பட்டது.இந்த நிலையில், இப்போது மத்திய தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.12,540-ஆகவும், தர ஊதியம் ரூ.4,600-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படுகிறது. இதேபோன்ற அளவில், தலைமைச்செயலக உதவிப் பிரிவு அலுவலர்களுக்கும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment