FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 October 2015

கரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ம.வீ.செந்தில்குமார் அவர்களின் மெத்தனப்போக்கு மற்றும் செயல்படாத தன்மை.....

இந்த மாதம் முழுவதும் ஒரு நாள் கூட மாலை 4.00 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்கள் தபால்களையும் குறைகளையும் வெறும் நாற்காலியிடம் அளிக்க வேண்டிய நிலை....
இன்று (27.10.15) காலை மார்னிங்ஸ்டார் பள்ளியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கப்படுவதாகவும், அதனால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் மாணவர்களை இன்று முதல் மூன்று நாள்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்றால் புகைப்படம் எடுக்க மறுக்கப்பட்டது. புகைப்படம் எடுப்போரிடம் விசாரித்த போது நாங்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகளிலே வந்து எடுப்பதாகவும், இங்கே வரச்சொல்லி சொல்லவில்லை என்றும் பதில். சரி இது சம்பந்தமாக Aeeo விடம், ஏன் ஆசிரியர்களை இப்படி அலைக்கழிக்கிறீர்கள் என்று கேட்க தொடர்பு கொண்டால், போனை எடுக்கவில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கே நேரம் போதாமல் பயிற்சிக்கு அழைக்கப்டும் போது, இது போன்ற தவறான தகவல்களை தெரிவித்து விட்டு ஆசிரியர்களையும் மாணவர்களையும் அலைக்கழிப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை பெற கட்டாய படுத்த கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவண்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
கரூர் வட்டாரம்.

No comments:

Post a Comment