FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

18 October 2015

சுருக்கெழுத்து தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி

அரசு நடத்திய சுருக்கெழுத்து தேர்வில்,
விடைத்தாள் திருத்தும் பணியில்
ஈடுபட்டவர்களுக்கு, அதற்கான முழு
கல்வித்தகுதி இருக்கிறதா என்ற கேள்வி
எழுந்துள்ளது. அதுபற்றி எந்த உறுதியும்
செய்யப்படவில்லை என, தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் பதிலளித்து உள்ளது.
சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எம்.எஸ்.குமார்,
பிப்ரவரியில் நடந்த, தட்டச்சு மற்றும்
சுருக்கெழுத்து தேர்வு தொடர்பான சில
தகவல்களை, தகவலறியும் உரிமை சட்டத்தில்
கேட்டிருந்தார்.அதற்கு, அரசு தொழில்நுட்பக்
கல்வி இயக்ககம் அளித்துள்ள பதில்
விவரம்:சுருக்கெழுத்து பாடத்திற்கான
விடைத்தாளர்களை மதிப்பீடு செய்யும்
பணியில், 23 பேர் ஈடுபட்டனர்.சுருக்கெழுத்து
தேர்வுக்கான மதிப்பீட்டு மையம், சென்னை
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில்
செயல்பட்டது.சுருக்கெழுத்து பாடத்திற்கு
மதிப்பீடு செய்வதற்கு, தேர்வாளராக
இருந்தவர்கள், நீண்ட ஆண்டுகளாக, மதிப்பீடு
செய்பவர்களாக உள்ளனர். அதனால், அவர்களின்
கல்வித்தகுதி உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.சுருக்கெழுத்து விடைத்தாள் திருத்தும்
பணியில் ஈடுபட்டவர்களின், கல்வித்தகுதி
உறுதிப்படுத்தப்படவில்லை என,
தெரிவித்திருப்பது, தேர்வு எழுதியவர்களிடம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment