FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 October 2015

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் இனிக் கவலைப்பட வேண்டாம். இனி நம் வசதிக்கேற்ப வேறு ரயிலுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அந்த
டிக்கெட்களை அப்படியே மற்ற ரயிலில் இருக்கும்
சீட் அல்லது பெர்த் வசதிக்கேற்ப மாற்றி தர
ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக 'அல்டர்நேடிவ் டிரைன்ஸ்
அக்காமடேஷன் ஸ்கீம்' (Alternate Trains
Accommodation Scheme) என்ற திட்டத்தை நவம்பர்
1-ம் தேதி ரயில்வே துவங்க உள்ளது. இந்த
புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் டிக்கெட்
முன்பதிவு செய்யும் போது மாற்று
ரயில்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
சென்னை-மதுரை, தமிழகம்-தில்லி உள்ளிட்ட
ரயில்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு 300-
க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில்
இருப்பதால் இந்த மாற்று ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment