FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 October 2015

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 23-ம் தேதி செயல்படும்!

அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு
மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை 24-ம்
தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 23-ம்
தேதி வெள்ளிக்கிழமை மத்திய அரசு
அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மொஹரம் பண்டிகைக்கு வரும்
சனிக்கிழமை (24-ம் தேதி) விடுமுறை என
அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு
அலுவலகங்களுக்கும் மொஹரம்
பண்டிகைக்கான விடுமுறை
வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு
மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு
ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛‛மொஹரம்
பண்டிகைக்கான விடுமுறையை அக்.23-ம்
தேதியில் இருந்து அக்.24-ம் தேதிக்கு மாற்றி
தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, மொஹரத்துக்கான
விடுமுறையை மத்திய அரசு ஊழியர்கள் நல
ஒருங்கிணைப்புக் குழு 24-ம் தேதிக்கு மாற்றி
அமைத்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்
உள்ள அனைத்து மத்திய அரசு
அலுவலகங்களும் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை
வழக்கம்போல் செயல்படும்’’ என
தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வங்கிகளுக்கும் மொஹரம்
பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு
மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி
ஒருவர் கூறியதாவது:
பொதுவாக வங்கிகளுக்கு அந்தந்த
மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்பட்டு
வருகிறது. இந்த ஆண்டு ஆயுதபூஜை,
மொஹரம் பண்டிகை மற்றும் வார விடுப்பு
காரணமாக அக்.21-ம் தேதி முதல் 25-ம் தேதி
வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு மொஹரம்
பண்டிகைக்கு 23-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு
பதிலாக 24-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை
அறிவித்துள்ளது. இதை ஏற்று தமிழகத்தில்
உள்ள அனைத்து வங்கிகளுக்கும்
வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு
அன்றைய தினம் வேலை நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,
வெள்ளிக்கிழமை அனைத்து வங்கிகளும்
செயல்படும்.

No comments:

Post a Comment