FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 January 2017

விடுதி மாணவ, மாணவியர் ’சென்டம்’ பெற்றால் ரூ.1,000

ஈரோடு: அரசு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வுகளில் சென்டம் பெற்றால், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும்.


ஈரோடு மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பள்ளி மாணவ, மாணவியர் அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 


இவர்களை ஊக்குவிக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெறுவோருக்கு தலா, 1,000 ரூபாய் வீதம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 


எனவே, அரசு பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியர், அரசு பொதுத்தேர்வுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றால், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் ஊக்கத்தொகையாக, தலா, 1,000 ரூபாய் பெறலாம். இத்தகவலை, ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment