FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 January 2017

’நீட்’ தேர்வுடன் ’எய்ம்ஸ்’ தேர்வு எழுதலாம்!

”மருத்துவ படிப்புக்கான அனைத்து நுழைவு தேர்வுகளையும் எழுதினால், மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புகள் அதிகரிக்கும்,” என, ’டைம்’ பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜன் தெரிவித்தார். 


சென்னையில், ’தினமலர்’ நடத்திய, ’நீட்’ தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், நாகராஜன் பேசியதாவது:இன்ஜினியரிங் கல்லுாரிகள் போல, மருத்துவ கல்லுாரிகள் அதிகம் இல்லை. அதனால், மருத்துவ படிப்பில் சேர கடும் போட்டி நிலவுகிறது. 


எனவே, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்கள் லட்சியத்தை, கனவை பெரிதாக்கி கொள்ள வேண்டும். சிறிய விஷயமானாலும், அதில் வெற்றி பெற பெரிதாக இலக்கு வைக்க வேண்டும்.


’நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பவர்கள், ’நீட்’ தேர்வை மட்டும் எழுதினால் போதாது. அகில இந்திய அளவில் நடக்கும், எய்ம்ஸ், ஜிப்மர் தேர்வுகளையும் எழுத வேண்டும். மற்ற தேர்வுகளுக்கும் சேர்த்து தயாராகும் போது, ’நீட்’ தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்; மற்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, மருத்துவத்தில் சேர வாய்ப்பு அதிகரிக்கும்.


அரசு கல்லுாரிகளில் மட்டுமின்றி, தனியார் கல்லுாரிகளிலும் சேர, ’நீட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதோடு, பிளஸ் 2 தேர்வில், 50 சதவீதமாவது மதிப்பெண் பெறுவது அவசியம். எனவே, மாணவர்கள், பொதுத்தேர்வு மதிப்பெண்ணை தவற விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment