அரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரின் இட மாற்றத்தை கண்டித்து அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அரூர் ஒன்றியம், வேப்பநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் 136 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆங்கிலப் பாட ஆசிரியர் காந்தி உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆங்கிலப் பாட ஆசிரியர் காந்தி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆசிரியர் காந்தியை இடமாற்றம் செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலப் பாட ஆசிரியர், தலைமை ஆசிரியர் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆசிரியர் காந்தி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் ஆங்கிலப் பாட ஆசிரியர் நன்றாக கல்வி போதிக்கிறார், எனவே அவரை இடமாற்றம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பள்ளி மாணவர்கள் தமது பெற்றோருடன் சேர்ந்து வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மேரி சகாயராணி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆசிரியர் காந்தியின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உதவி தொடக்கத் கல்வி அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து, அவரது சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பைக் கைவிட்டு, பள்ளிக்குச் சென்றனர்.

No comments:
Post a Comment