FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 April 2016

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., இன்று இடமாற்றம்?

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

.பல ஆண்டுகளாக, ஒரே மாவட்டத்தில் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யாக உள்ள சிலரும், செயலர் அந்தஸ்தில் உள்ள சிலரும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்; அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சிகள், 

தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தேர்தல் அறிவிக்கை முறைப்படி, இன்று காலை வெளியாகிறது. அதன்பின், அதிகாரிகள் அனைவரும், தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனர். எனவே, இன்று சில ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment