FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 October 2015

தீவிரமடைகிறது வேலைநிறுத்தம்: 90% ஆசிரியர்கள் பங்கேற்பு பள்ளிகளை பாதுகாப்புடன் நடத்த அரசு முயற்சி

ஜேக்டோ அமைப்பினர் அறிவித்தபடி இன்று 90
சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில்
அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க,
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப்
பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சம் ஆசிரியர்கள்
15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்
மாதத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை
நடத்தி வருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பில்
ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமல்
கிடப்பில் போடப்பட்டது. இதனால்
ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்
போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில்,
ஜேக்டோ அமைப்பில் இணைந்துள்ள 24 ஆசிரியர்
சங்கப் பிரதிநிதிகளை பள்ளிக் கல்வித்துறை
இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர்
நேரில் அழைத்து நேற்று முன்தினம்
பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கையை
நிறைவேற்றுவதற்கான முகாந்திரம் ஏதும்
இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால்
ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து திட்டமிட்டபடி
வேலை நிறுத்தம் நடக்கும் என்று நேற்று
முன்தினம் மாலை அறிவித்தனர். ஆசிரியர்களின்
வேலை நிறுத்தப் போராட்டம் பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் மற்றும்
அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அமைச்சர்கள் பன்னீர்செல்வம்,
நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம்,
பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித் துறை
அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
மற்றும் அதிகாரிகள் நேற்று காலை, தலைமை
செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினர்.
அதில், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப்
போராட்டத்தை தடுத்து நிறுத்துவது குறித்து
ஆலோசித்தனர். அப்போது அரசுக்கு ஆதரவான
சில சங்கத்தினரையும் அழைத்துப் பேசினர்.
இதன்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்
தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பள்ளிகளின்
சாவியை வாங்கி, அந்தந்த பள்ளி சத்துணவு
பொறுப்பாளர்கள் மூலம் இன்று பள்ளிகளை
திறப்பது என்றும், ஆதரவு சங்கத்தின்
ஆசிரியர்கள் மற்றும் 11000 தற்காலிக
ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு
வகுப்புகளை நடத்துவது என்றும் அரசு தரப்பில்
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப நேற்று
மாலையே தொடக்கப் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளை
பூட்டி அவற்றின் சாவிகளை அந்தந்த பகுதியை
சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம்
ஒப்படைக்க தீர்மானித்தனர்.
ஆனால் பல மாவட்டங்களில் சாவியை பெற்றுக்
கொள்ள தயக்கம் காட்டி உதவி தொடக்க கல்வி
அலுவலர்கள் சென்று விட்டனர். மேலும்,
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும்
தொடக்க, உயர்நிலை, மேனிலைப் பள்ளி
ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் ஒரு நாள்
விடுப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். இதன்படி
90 சதவீத ஆசிரியர்கள் இன்று வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இன்று
அனேக பள்ளிகள் மூடியே கிடக்கும் என்ற நிலை
உருவாகியுள்ளது. இன்று வேலை நிறுத்தத்தில்
ஈடுபடும் ஆசிரியர்கள் காலை 11 மணி முதல் 12
மணிவரை அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவார்கள். இதையடுத்து, பலத்த போலீஸ்
பாதுகாப்புக்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment