FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 October 2015

3 கோரிக்கை ஏற்பு; 12க்கு கைவிரிப்பு- இ.ஆசிரியர்களுக்கு இந்த முறையும் !!!

ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளில் மூன்று
கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை
முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள்
வட்டாரத்தில் கூறியதாவது: நிதி சார்ந்த
கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க,
நிதித்துறைச் செயலருக்கு கோப்புகள்
அனுப்பப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளுக்கு
கூடுதல் நிதி தேவை என்பதால், தற்போது எந்த
முடிவும் எடுக்க முடியாது என நிதித்துறை
தெரிவித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து
செய்வது மத்திய அரசின் முடிவை சார்ந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வையும் ரத்து செய்ய
முடியாது. இதுகுறித்து முதல்வர் தான்
முடிவெடுக்க வேண்டும்.பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் இறந்த மற்றும்
ஓய்வுபெற்றோருக்கு, ஓய்வூதியம் மற்றும்
பணப்பயன்கள் வழங்குவது குறித்து அரசுக்கு
கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு
மாதத்தில் உரிய உத்தரவுகள்
வெளியாகும்.கடந்த, 2004க்கு பின், நியமனமான
ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய காலம்,
பணிக்காலமாக வரன்முறைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment