FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 October 2015

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: கல்வித்துறை எச்சரிக்கை.

தமிழகம் முழுவதும் 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டு
இயக்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம்
நடக்கிறது.சமரச பேச்சு வார்த்தை நடத்தியும்
அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில்
குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
ஆசிரியர்கள் எத்தனை பேர் என்று மாவட்டம்
வாரியாக கல்வித்துறை பட்டியல் கேட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் தொடக்கபள்ளி ஆசிரியர்கள்
அதிகளவு பங்கேற்று இருப்பதால் தொடக்க கல்வி
இயக்குனர் இளங்கோவன் ஒவ்வொரு மாவட்ட
தொடக்ககல்வி அதிகாரிகளும் பள்ளிக்கு வராத
ஆசிரியர்கள்பெயர் விவரங்களை உடனடியாக
அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு
இன்று ஒருநாள் சம்பளம் ரத்து
செய்யப்படுகிறது.'நோ ஒர்க் நோ பே' என்ற
அடிப்படையில் இன்று பணிக்கு வராத
ஆசிரியர்களுக்கு 'கட்' செய்யப்படும். இது தவிர
துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா?
என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம்
கேட்டதற்கு, போராட்டத்தில் ஈடுபட்ட
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து கல்வி அதிகாரிகள் மேலும்
கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள்
வேலைக்கு வந்தார்கள், எத்தனை பேர்
வரவில்லை,ஏற்கனவே விடுப்பில் உள்ளவர்கள்
எத்தனை பேர் என்ற விவரங்கள்
கேட்கப்பட்டுள்ளன.அந்த பட்டியல் வந்த பிறகு
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டால் ஆசிரியர்களின் பதவி உயர்வு
பாதிக்கும். பதவிஉயர்வுக்கான பேனலில் இடம்
பெற முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment