FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 December 2018

CPS-ஐ நீக்கினால் ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க JACTTO-GEO அறிவிப்பு

CPS நீக்கம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அறிவித்துள்ளது.

 டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ள கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறும் சூழலில் ஜாக்டோ-ஜியோவின் நடவடிக்கை பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 இது குறித்து விளக்கமளித்துள்ள ஜாக்டோ-ஜியோவின் நிதிக்காப்பாளரான திரு.ச.மோசஸ், பல ஆண்டுகாள தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தே இத்தகைய நிலைக்குள் ஜாக்டோ-ஜியோ தள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய ஜாக்டோ-ஜியோவின் ஊடகச் சந்திப்பிலேயே *ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கஜா புயல் நிவாரணப் பணிகள் துளியளவும் பாதிக்காது. மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்  பிற மாவட்ட ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்  என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில ஊடகங்கள் இதனை மறைத்து வெறும் வேலைநிறுத்தச் செய்தியை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன.

ஜாக்டோ-ஜியோவைப் பொறுத்தவரை புயல் பாதிப்பிற்குள்ளான மாவட்ட மக்களின் உணர்வுகளையும் எமது உறுப்பினர்களின் உரிமையையும் ஒருங்கே மதித்தே வேலைநிறுத்தப் போராட்ட வடிவத்தைத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், நிவாரணப் பணிகளோடே நின்று விடாது *நிதி உதவி வழங்குவதிலும் ஜாக்டோ-ஜியோவின் உறுப்பு சங்கங்கள் தனித்தனியாகவும் பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பங்களிப்புகளைச் செய்துள்ளதோடே ஜாக்டோ-ஜியோ சார்பாக ஒரு நாள் ஊதியத்தையும் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புயல் நிவாரணப் பணிக்காக ரூ.15,000/- கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

தற்போதும் எமது போராட்டக் கோரிக்கைகளில் முதன்மையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எமது பிடித்தத்தில் நாளது தேதி வரை அரசு செலுத்தியுள்ள 10% தொகையான ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


 மேலும், CPS திட்டத்தினை இரத்து செய்வதன் வழியாக அரசிற்கு  இந்த டிசம்பர் 1-ம் தேதி முதலே மாதம் தோறும் ரூ.250 கோடி நிதிச் செலவினம் குறையும் என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment