FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 November 2018

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப உத்தரவு

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவர்கள் விவரங்களை ஏற்கனவே அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தங்கள் தேர்வு மையத்தில் மார்ச் 2019ம் தேர்வு எழுத்தவுள்ள பிளஸ்2 மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வுஅறைகள் தொடர்பான விவரங்கள் அதற்கான உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை ஒப்படைக்கப்படாதது வருந்தத்தக்க செயலாகும்.


இனி காலம் தாழ்த்தாமல் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மெத்தனபோக்கை தவிர்க்க வேண்டும். உடனடியாக துரிதமாக செயல்பட்டு விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் தேர்வு எழுதும் நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகளை ஒதுக்கீடு செய்வதற்காக பெறப்படுகிறது. இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment