FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 December 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கரூர் நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்று, புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கரூர் நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்று, புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிஎஸ்ஐ சிறுவர் தொடக்கப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் தேர்தல் ஆணையர்களாக பரமத்தி வட்டாரச் செயலர் பொன்னுசாமி, தாந்தோணி வட்டாரச் செயலர் சதீஷ் ஆகியோர் செயல்பட்டனர்.
கரூர் நகரத் தலைவராக கிறிஸ்டினாள் செல்வராணி, செயலராக முகம்மது பரீத், பொருளாளராக விஜயலட்சுமி, கொள்கைப் பரப்புச் செயலராக அருண்ரெக்ஸ், மகளிரணி தலைவராக ஜெயலட்சுமி ஆகியோரும், கரூர் ஒன்றியத் தலைவராக குழந்தைஅரசு, செயலராக கண்ணன், பொருளாளராக வளர்மதி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து முதல் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரகுபதி, செயலர் பா. பெரியசாமி, மாநில துணைத் தலைவர் எம்ஏ. ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் சுந்தரகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து புதிய நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்படுவது என உறுதிமொழியேற்றனர்.

No comments:

Post a Comment