வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் நாள் ,சென்னை, திருவல்லிக்கேணி, MOP வைஷ்ணவா நிதி உதவிப்பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு ,அன்றைய தினம் ஜாக்டோ-ஜியோ வின் உயர்மட்டக்குழுக்கூட்டம் நடைபெறுவதன் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. செயற்குழு பிரிதொரு நாளில் முறையான அறிவிப்புக்கு பின் நடைபெறும் என அறிவிக்கப்படுக்கிறது. எனினும் மாவட்டசெயலர்கள் வட்டார செயலர்களிடம் தொடர்புகொண்டு உறுப்பினர் சேர்க்கை முடித்த விவரம், மாநிலப்பங்கீடு செலுத்திய விவரம், மாநாடு நன்கொடை ரசீது பெற்ற விவரம் ,வட்டாரங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட விவரம் ,அதன்மூலம் பெறப்பட்ட தொகை விவரம் போன்றவற்றை அடிக்கட்டுடன் பெற்று தயாராக வைத்திருக்க வேண்டப்படுகிறது.ஆசிரியர் பேரணி சந்தாசேர்க்கை முடித்து உடன் அனுப்பிவைக்க வட்டார ,மாவட்டசெயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மாநில இணை ,துணைப்பொறுப்பாளர்கள் தங்கள் பங்களிப்பாக ஒவ்வொருவரும் 10 ஆசிரியர் பேரணி சந்தாக்கள் பெற்று முகவரிப்பட்டியலுடன் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது
தகவல் கேபி.ரக்ஷித், மாநில பொருளாளர்
தகவல் கேபி.ரக்ஷித், மாநில பொருளாளர்
No comments:
Post a Comment