FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 July 2017

கட்டணங்களில் அதிரடி மாற்றம் செய்யும் ஸ்டேட் பாங்க்

புது தில்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம்
செய்யும் வாடிக்கையாளர்கள் இனி 75% அளவுக்குக் குறைவான கட்டணம் செலுத்தினால்  போதும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் அல்லது செல்போன் ஆப்-பை பயன்படுத்தி என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலமாக ஒரு வங்கிக் கணக்கில் மருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஸ்டேட் பாங்க் மேற்கொண்டுள்ளது.

முன்பு, ரூ.10 ஆயிரம் வரை என்இஎஃப்டியில் பணப்பரிமாற்றம் செய்ய ரூ.2 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி இது ரூ.1 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. (ஜிஎஸ்டி 18 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்). என்இஎஃப்டியில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.4 கட்டணம் தற்போது ரூ.2 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஆர்டிஜிஎஸ் மூலமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கான கட்டணமும், ரூ.20ல் இருந்து ரூ.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முந்தையக் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இது 75% கட்டணக் குறைப்பாகும்.

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த கட்டணக் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக எஸ்பிஐ உயர் அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக, இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணப்பரிமாற்றத்துக்கான கட்டணத்தை ஜூலை 1ம் தேதி முதல் மாற்றியமைத்தது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment