FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 July 2017

தனி ஊதியம் 750 ஊதிய நிர்ணயத்தில் தொடக்கக் கல்வி இயக்கக தெளிவின்மை

தனி ஊதியம் 750pp நிர்ணயத்தில்
➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖➖➖

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் தெளிவின்மை ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🔴அரசாணை 23ன்படி சாதாரண இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் 750 1.1.2006 முதல் வழங்கப்படாமல் 1.1.2011 முதலே வழங்கப்பட்டு வருகிறது .



🔵 நிதித்துறை தெளிவுரை 8764படி இத்தனி ஊதியம் ஓய்வூதியம் வரை பணப்பலனுக்கு கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் .



🛑 1.1.2011க்கு முன்பாக 2800 தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 750தனி ஊதியம் வழங்கப்படவில்லை .



⚫1.1.2011க்குபிறகு பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் 750தனி ஊதியம் சேர்க்கப்பட்டது



💢1.1.2011க்கு முன்பாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு 750தனி ஊதிய பலன்களை அரசு வழங்கவில்லை



✳ இதனால் பல ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டு நீதிமன்றங்கள் தனி ஊதியத்தை 1.1.2006லிருந்து உத்தரவுகளை பிறப்பித்தும் தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆணைகளை நடைமுறைபடுத்தவில்லை .



♻1.1.2011க்கு முன்பாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தனி ஊதிய பலன்களை வழங்க நீதிமன்றங்கள் ஆணைகளை செயல்படுத்த கல்வித்துறை செயலருக்கு கருத்துருக்கள் அனுப்பவில்லை .



🖤மாறாக தனி ஊதியத்தை இளையோருக்கு அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கி வருவதை தணிக்கை வழியாக பிடித்தம் செய்து வருகிறது .



🔥தனி ஊதியம் 750 பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் பதவி உயர்விற்கு பிறகு கழிக்கப்பட்டு தொடக்கக் கல்வி இணை இயக்குனர் நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளார்கள் .



🌺இதே நடைமுறையில் ஊதியம் நிர்ணயம் செய்த பூவிருந்தவல்லி உதவித் தொடக்க கல்வி அலுவலரிடன் ஆணை தவறென நிதித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்



🔥ஒரே ஊதிய நிர்ணயத்தை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் இருவரும் மாறுபட்ட வகையில் வழங்கி உள்ளனர் .



🖤இந்நிலையில் திருச்சி மண்டல தணிக்கை அலுவலர் தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் நிதித்துறை செயலரின் ஆணைகளுக்கு முரணாக தணிக்கை தடைகளை உண்டாக்கி வருகிறார்கள் .



💙பள்ளிக்கல்வித்துறை மதுரை , கோவை மண்டல தணிக்கை அலுவலர்கள் மற்றும்
தொடக்கக் கல்வி மதுரை மற்றும் கடலூர் மண்டல தணிக்கை அலுவலர்களின் கருத்துக்கு திருச்சி மண்டல தணிக்கை அலவலர் 750தனி ஊதியம் உயர்பணியிட ஊதிய நிர்ணய விசயங்களில் மாறுபடுகிறார் ..



😳 தமிழக நிதித்துறை , தொடக்கக் கல்வித்துறை மற்றும் தணிக்கை அலுவலர்களின் ஆணைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகிறது ..



🚩இந்நிலையில் ஏற்பட்டு வரும் இளையோர் மூத்தோர் முரண்பாடுகளை களைய மறுப்பதும் , அனைவருக்கும் சமமாக பாகுபாடற்ற வகையில் தனி ஊதியம் 750ன் பலன்களை 1.1.2006லிருந்து வழங்க மறுப்பதும் கல்வித்துறையில் அதிக நீதிமன்ற வழக்குகளை தொடுக்கும் நிலையினை உருவாக்கி உள்ளது தொடக்கக் கல்வி இயக்ககம்.



🔴சம கல்வித்தகுதி சம வேலை சம ஊதியம் அனைவருக்கும் பாகுபாடு இல்லாத வகையில் வழங்குவதே இறுதி தீர்வாக இருக்க முடியும் .



🔥கல்வித்துறை இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்தும் என நம்புவோம் ..

ஆக்கம்

சுரேஷ்மணி

நாமக்கல்

9943790308

No comments:

Post a Comment