FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 November 2016

CPS:காலாவதியானது வல்லுனர் குழு : பென்ஷன் திட்டம் என்னாச்சு?

புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு காலாவதியானதால் அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமுலில் உள்ளது. இதுவரை 4.23லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தனர். 
அவர்களிடம் வசூலித்த பென்ஷன் சந்தா, அரசு பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை பிப்., 26ல் அரசு அமைத்தது. 


அந்த குழு ஒருமுறையே கூடியது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே, அந்த குழுவிற்கான இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழுவின் இயங்கும் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.உறுப்பினர்களாக இருந்த பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த குழு செப்., 15, 16 மற்றும் செப்., 22 ல் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் அக்., 27 வுடன் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது. 

இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: வல்லுனர் குழு அமைத்தது கண்துடைப்பு போல் உள்ளது. அக்., 27 ல் குழு இயங்கும் காலம் முடிந்தது. அக்குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ததா (அ) குழு மீண்டும் நீடிக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இல்லை. குழு மீது நம்பக தன்மை இல்லாததால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர், என்றனர்.

No comments:

Post a Comment