FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 July 2016

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்

பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்குஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசுஅறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால்,ஊதிய உயர்வு கிடையாது' எனவும்

அறிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரிஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள்விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால்,மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாகஉள்ளது. அனைத்து மாநிலங்களிலும், தகுதியும்,திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, தனியாகஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும்

அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனி,மத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்

தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை

உருவாக்கப்படும்

ஆசிரியர்களுக்கான விருதை இனி, பள்ளிகளில் உள்ளபெற்றோர், மாணவர் மன்றங்களே முடிவு செய்யும்

ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும்திறனை சோதிக்கும், திறனறி தேர்வு, ஐந்து ஆண்டுகளுக்குஒரு முறை நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்.

இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

3 பாடத்துக்கு ஒரே 'சிலபஸ்' : ஒவ்வொரு மாநிலமும்ஒவ்வொரு வித பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன.இதில் மதிப்பீட்டு முறையிலும் வித்தியாசம் ஏற்பட்டு, பலபுகார்கள் எழுகின்றன. எனவே, தேசிய அளவில், 10ம் வகுப்புமற்றும் பிளஸ் 2வுக்கு, ஒரே தேர்வு நடத்தலாமா என,ஆலோசிக்கப்படுகிறது.


கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள்ஒவ்வொரு விதமாக படிப்பதால், அவற்றுக்கு தேசியஅளவில், ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூகஅறிவியல் மற்றும் பிற பாடங்கள், மாநிலங்களின்விருப்பத்தில் அமையும். கணினி வழி கல்வி, 6ம் வகுப்புமுதல் கட்டாயம் ஆக்கப்படும் .

No comments:

Post a Comment