FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 June 2016

வட்டியில்லா EMI வசதியை அறிமுகப்படுத்துகிறது ப்ளிப்கார்ட்

ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் ப்ளிப்கார்ட் (flipkart). ப்ளிப்கார்ட் இன்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வட்டியில்லா மாதத் தவணைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ப்ளிப்கார்ட், ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டு உபயோக மின்னியல் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. 
இதன் மூலம், வாடிக்கையாளர் 5000 ரூபாய்க்கு அதிகமான மின்சாதனங்களை மாதத் தவணைத்திட்டத்தில் வாங்கும்போது, அதற்கு கட்டணமோ அல்லது வட்டியோ கிடையாது. இதுமட்டுமில்லாமல், இதற்கு முன் பணமாக எதுவும் செலுத்தத் தேவையில்லை. Bajaj Finserv லிமிடெட் மற்றும் மின்னியல் சாதனங்களின் முக்கிய விற்பனையாளர்களுடன் இணைந்து ப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த லாப ஏற்ற இறங்களை சமன்படுத்திக்கொள்ளும். மாதத் தவணையை Bajaj Finserv மற்றும் முக்கிய ப்ராண்ட்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்.
தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின் போன்ற மின்னியல் சாதனங்களின் ஆன்லைன் விற்பனை குறைவாக உள்ளது. ப்ளிப்கார்ட்டின் இந்தச் சலுகையின் மூலமாக இந்த வகை பெரும் செலவுகொண்ட மின்னியல் பொருட்களின் விற்பனை பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த “No cost EMI" மூலமாக ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு வாங்கும் செலவை எளிதாக்குவதே நோக்கம் என்று ப்ளிப்கார்டின் டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர் நிதிசார் சேவைகளின் தலைவர் மயாங்க் ஜெய்ன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment