FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 June 2016

அரசாணை வெளியிட்டும் பலனில்லை - புது பென்ஷன் பலன்களை பெறமுடியாமல் ஓய்வூதியர்கள் பரிதவிப்பு

*நன்றி திரு . பிரடெரிக்ஏங்கல்ஸ்*

அரசாணை வெளியிட்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு புது
பென்சன் திட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி
ஏற்பட்டு வருகிறது.


தமிழகத்தில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய பென்ஷன் திட்டம்
அறிவிக்கப்பட்டது. இதன்படி இத்தேதியில் இருந்து பணிக்கு சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் 4.50 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தினால் ஓய்வூதியம் பாதிக்கப்பட்டதோடு பணிக்கொடை, வருங்கால வைப்புநிதிக்கடன், கமிட்டேசன் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் பறிபோனது.
மேலும், புதிய பென்ஷன் திட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ள தொகையும் ஒய்வு பெற்றவர்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை. 2011 தேர்தலின் போது புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சங்க நிர்வாகிகளைக் கூட அழைத்துப் பேசவில்லை. இதனால் நொந்து போன அரசு ஊழியர்கள் படிப் படியாக தங்கள் போராட்டத்தை விரிவுப்படுத்தினர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என்று ஒரு கட்டத்தில் கலெக்டர் அலுவலகங்களில் தங்கியிருக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டம் முற்றியதால் கடந்த பிப்.19ம் தேதி புதிய பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற, இறந்த, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு இதற்கான பணப்பலன் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித் தார். தொடர்ந்து பிப்22ல் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட் டது. இதனை தொடர்ந்து பல ரும் இதற்காக விண்ணப்பித்தனர். ஆனால் இன்று வரை அழைக்கழிப்பே இவர்களுக்கு மிஞ்சுகிறது.
இணைப் புப் ப டி வம் இல்லை, பணி பதிவேடு நகல் இல்லை, பணி விடு விப்பு ஆணை இணைக் கப் ப ட வில்லை என்று தொடர்ந்து தாமதப்படுத்தும் முயற்சிகளே நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அரசாணை வெளியிட்டும் புதிய பென்சன் திட்ட பணப்பலன்களை ஓய்வு பெற்ற பல ரும் பெற முடி யா மல் பரி த வித் துக் கொண் டி ருக் கின் ற னர்.
இந்நிலையில் தற்போதைய அதிமுக வாக்குறுதியில், புதிய கமிட்டி அமைத்து பழைய பென்ஷன் திட்டம் தொடர வழி வகை செய்யப்படும் என்று தெரி விக் கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிட்டும் தங்களுக்கு உரிய பணப்பலன் கிடைக்காத நிலை யில் அதிமுகவின் இது போன்ற வாக்குறுதி தொடர்ந்து அரசு ஊழியர்களிடையே சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து தேனி மாவட்டம், மேலச் சொக்கநாதபுரம் பகு தியை சேர்ந்த ஓய்வு ஆசிரியர் சொட்டப்பன் கூறுகையில், ‘2013 மே 31ல் ஓய்வு பெற்றேன். பல முறை விண்ணப்பித்தும் இது வரை பணப்பலன்களை கிடைக்கவில்லை. காலமெல்லாம் அர சாங்கத்திற்காக உழைத்து விட்டு முதுமைப்பருவத்தில் எங்களுக்கான பணப்பலன்களை பெற இவ்வளவு அலைய வேண்டியுள்ளது’ என்று வருத்தத்துடன் கூறினார்.

குஜிலியம்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறுகையில், ‘புதிய ஓய்வூதியத்திட்ட பயனாளிகளுக்கு அதற்கான பணப்பலன்களை முறையாக அரசு வழங்கவில்லை. ஒவ் வொருமுறையும் வெவ்வேறு காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை திருப்பி அனுப்பி வருகிறது.
இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது’ என்றார்.

No comments:

Post a Comment