FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 June 2016

ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வசதிகள், வரும் ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வசதிகள், வரும் ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, ரயில்வே அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் மற்றும் வசதிகள்:
* தத்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், 50 சதவீத பணம் திரும்ப கிடைக்கும்
* ராஜதானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களுக்கு, மொபைல் டிக்கெட்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்
* ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் இனி, உள்ளூர் மொழிகளான, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும்
* ராஜதானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
* சுவிதா ரயில்களில், காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று வசதி கிடைக்கும்
* முக்கிய ரயில் நிலையங்களில், வை - பை வசதி, வி.ஐ.பி., காத்திருப்பு அறை, போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்கும். இவற்றை பயன்படுத்த, பயணிகள், மணிக்கு, 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்
இந்த தகவல்களை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment