FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 June 2016

தமிழகத்தில் இன்று ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தலைமைச்செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டார்...

சென்னை: தமிழகத்தில் இன்று ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். 
தலைமைச்செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டார். 

அவருக்கு பதில் ராமமோகன் ராவ் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 

முதல்வராக ஜெ., பொறுப்பேற்ற பின்னர் இன்று கட்சியில் பெரிய அளவில் மாற்றம் செய்தார். 

இதனை தொடர்ந்து மாலையில் நிர்வாக ரீதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களாக தலைமைச்செயலாளராக இருந்த ஞானதேசிகன், தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிகழக கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதில், முதல்வரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்த பி.ராமமோகன் ராவ் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


மேலும், பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதன் விபரம்: 

சாந்தா ஷீலாநாயர் - முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி 
கே.என்.வெங்கட்ரமணன்- முதல்வரின் முதன்மை செயலாளர் 
ஷிவ்தாஸ் மீனா-இரண்டாவது முதன்மை செயலாளர் 
எஸ்.விஜயகுமார்- மூன்றாவது முதன்மை செயலாளர் 
ஏ.ராமலிங்கம்-நான்காவது முதன்மை செயலாளர் 
பிரதீப் யாதவ்- கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் 
ககன் தீப் சிங் பேடி- விவசாய உற்பத்தி ஆணையர், அரசு செயலர். கால்நடை பராமரிப்பு, பால் மீன்வளத்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பு 
ஹன்ஸ்ராஜ் வர்மா- ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர். 
அதுல்யா மிஸ்ரா- சுற்றுச்சூழல் வனத்துறை முதன்மை செயலாளர்.

No comments:

Post a Comment