FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 June 2016

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் 3 மாதங்களுக்கு இலவசம்.

நீண்ட நாள்களாக எதிர்பார்த்த ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரிலையன்ஸ் குழும பணி யாளர்கள் மட்டுமே (கடந்த டிசம்பர் முதல்) பயன்படுத்தி வந்த சேவையை இப்போது பொது மக்களும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதல் மூன்றுமாதங்களுக்கு இந்த சேவை இலவசமாக இருந்தாலும், 

ஜியோ எல்ஒய்எப் ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் மட்டுமே இந்த இலவச சேவையை பயன்படுத்த முடியும்.தவிர 4,500 நிமிடங்கள் இலவசமாக பேசவும் முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ5,490 முதல் ரூ.19,399 வரை விற்கப்படுகின்றன. மேலும் ஜியோ டாட் காம் என்னும் இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். 

எல்ஒய்எப் ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி சிம்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் கடைகள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள ரீடெய்ல் கடைகளில் விற்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் குழும பணியாளர்களுக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழும பணியாளர்கள் தங்களுடைய 10 நண்பர்களுக்கு பரிந்துரை செய்து வாங்கி கொடுக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. இப்போது வர்த்தக ரீதியாக அனைவரும் 4ஜியை பயன்படுத்துவற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரிலையனஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஸ்பெக்ட்ரம் அலைவரியை பகிர்ந்துகொள்கிறது. தவிர பார்தி இன்பிராடெல், ரிலையன்ஸ் இன்பிராடெல், இண்டஸ் டவர்ஸ் உள்ளிட்ட பல செல்போன் டவர் நிறுவனங் களுடன் டவர்களை பகிர்ந்து கொள்கிறது. முன்னதாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ரிலையன்ஸ் ஜியோ என்று குறிப்பிட்டார். ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டதினால் ஏற்கெனவே சந்தையில்இருக்கும் பார்தி ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment