FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 May 2016

கையெழுத்து சரியில்லை என மாற்றுச் சான்றிதழ் வழங்கிய பள்ளி

கையெழுத்து சரியில்லை என கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாற்றுத் திறனாளி மாணவி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத் திறனாளி மாணவி பிரியா படித்து வந்தார். கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு முடித்த அவர், அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரியாவின் கையெழுத்து சரியில்லை எனக் கூறி, வேறு பள்ளியில் சேருமாறு பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழை வழங்கியுள்ளது. இதனையடுத்து தம்மை பள்ளியில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க கோரியும், மாற்றுச் சான்றிதழ் வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவி பிரியா, தமது பெற்றோருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு கொடுத்தார்.

No comments:

Post a Comment