FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 May 2016

தஞ்சை, அரவக்குறிச்சியுடன் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு: ராஜேஷ் லக்கானி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட சீனிவேல் உயிரிழந்ததால் அந்த தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதால், தேர்தல் தேதி, தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி அறிவிக்கப்படும்.
அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தலுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. இது தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
தேர்தலின்போது வாக்குப் பதிவு குறைந்தது பற்றி ஆராய்ந்து வருகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் பூத் வாரியாக ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிவோம் என்றார்.

No comments:

Post a Comment