மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல், இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது.
குறிப்பிட்ட 6 பதவிகளுக்கு 31 மையங்களில் நடைபெறுவதாக இருந்த தேர்வு 8 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மையங்கள் குறித்த விவரங்கள், தேர்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை www.tangedco.gov.in, tangedco.directrecruitment.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment