FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 May 2016

நுழைவுத்தேர்வு அவசர சட்டம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், தற்போதைய நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும்,
ஜூலை மாதம் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தியது

No comments:

Post a Comment