FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 May 2016

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது- எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்த முடிவுகளை www.tnresults.nic.in ,
www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15-ந் தேதி முதல் ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளன. மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை
www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஜூன் 1-ந் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து
www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அத்துடன், அன்றைய தினமே மாணவர்கள் பயின்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment