FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 April 2016

மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது

       மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை10சதவீதம் அதிகரிக்க உத்தரவு. வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை10சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில்10சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும்நாளில் மாணவர்,ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில்வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள்,ஆங்கில வழிக் கல்வித்தரம்,வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்,கடந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,வளர்ச்சி குறித்து பெற்றோருக்கு எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். 

பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அதே பள்ளியில் படித்த மாணவர்களை மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ்1வகுப்பில் சேர்க்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment