FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 April 2016

ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை.

ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை கடன், கிரெடிட் கார்டு நிலுவைகளை திருப்பித்தராதவராக இருக்கக்கூடாது பாரத ஸ்டேட் வங்கி, கிளார்க் மட்டத்திலான பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்ட விளம்பரத்தில், விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுஉள்ளன. 


அதாவது, கடன் நிலுவை மற்றும் கிரெடிட் கார்டு பண நிலுவைகளை திருப்பித்தராதவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள், நடத்தை மற்றும் பின்னணி சரியில்லாதவர்கள்ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

கடன் பெற்றவர்களின் விவரங்களைj பராமரித்திடும் 'சிபில்' நிறுவனத்தை விண்ணப்பதாரர் அணுகி, தன்னைப் பற்றிய மதிப்பீட்டை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறும் ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. அதே சமயத்தில், கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வங்கி பணியாளர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

No comments:

Post a Comment