FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 April 2016

கோவையில் 5ம் வகுப்புக்கான வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

கோவை மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக 5ம் வகுப்புக்கான வினாத்தாள் வெளியாகி கடைகளில் விற்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைமற்றும் தொடக்க பள்ளிகளில் வரும் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. 


இதற்கான வினாத்தாள் தொடக்க, கல்வித்துறை மூலம் தயார் செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வினாத்தாளை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவைக்கேற்ப ஜெராக்ஸ் எடுத்து தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அப்படி தயார் செய்யப்பட்ட 5ம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியாகி, கோவையில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கல்வி துறையின் அலட்சிய போக்கே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டும்சமூக ஆர்வலர்கள், வினாத்தாள் வெளியாககாரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

No comments:

Post a Comment