FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 April 2016

தற்போதைய பொதுச்செய்திகள் @3.50 PM

💥TNPTF ARAVAKURICHI💥
தற்போதைய பொதுச்செய்திகள் @3.50 PM
👉👉
செய்திச் சுருக்கம்(20/04/2016)

1. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு பயணிகளை பத்திரமாக தரையிறக்கி விமானத்தில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அது புரளி என தெரிந்த பின் தாமதமாக விமானம் புறப்பட்டது.

2. வறட்சியால் 10 மாநிலங்களில் 33 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

3. உலகின் சிறந்த விளையாட்டு வீரராக டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சும், சிறந்த வீராங்கனையாக செரீனா வில்லியம்சும் தேர்வு செய்யப்பட்டு லாரெஸ் விருதை வசப்படுத்தினர்.

4. ஆந்திரா மாநிலத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு 34 பேர் பலியாகி உள்ளனர்.

5. The Union Government has extended the Beti Bachao Beti Padho Scheme in additional 61 districts across 11 States and Union Territories with low Child Sex Ratio. It was announced by the Women and Child Development Minister Maneka Gandhi while addressing the function in New Delhi.

6. India’s Durga Thakur has been promoted to international outdoor umpire by the International Hockey Federation (FIH).

7. மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'உதய்' திட்டத்தில் தமிழக அரசு சேராததால் தமிழ்நாடு மின் வாரியம் கேட்ட 6,000 கோடி ரூபாய் கடனை வழங்க, மத்திய அரசின் 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்கள் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

8. தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

9. இந்தியாவின் துர்கா தாக்கூர் என்பவர் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) சர்வதேச வெளிப்புற நடுவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

10. Renowned Hollywood actress Doris Roberts passed away in Los Angeles in her sleep. She was 90.

11. பெங்களூருவில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை தென் இந்திய நாடகத்திருவிழா நடைபெற உள்ளது.

12. The RBL Bank (formerly Ratnakar Bank) became the first private sector bank in India to open dedicated branch for startups.

13. மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் கண்ணாடி மூலம் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை வெளியிட இருப்பதாக பிரபல ஐபோன் ஆய்வாளர் மிங்-சி-கு தெரிவித்துள்ளார்.

14. 17-வது லாரெஸ் விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஏப்ரல் 18, 2016 அன்று இரவு வெகுவிமரிசையாக நடந்தது. உலகின் சிறந்த விளையாட்டு வீரராக டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சும், சிறந்த வீராங்கனையாக செரீனா வில்லியம்சும் தேர்வு செய்யப்பட்டு லாரெஸ் விருதை வசப்படுத்தினர்.

15. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நியூயார்க் மாநிலத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

16. பி.இ. படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

17. 1889-ஜெர்மானிய சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம் இன்று.

18. பாகிஸ்தானின் லாகூர் சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர் கிர்பால் சிங்கின் உடல், இந்திய அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

19. நா. சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பிறந்த தினம் இன்று.(20 ஏப்ரல் 1950)

20. கோடைக் காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாது என்றும் அதிகரித்துள்ள தேவையைக் கணக்கில் கொண்டு மின்சார உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மின்வாரிய அதிகாரிகள் கூறினர்

21. நாமக்கல்: 'தேர்தல் தொடர்பான, 274 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தட்சிணாமூர்த்தி கூறினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தட்சிணாமூர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.

22. அன்னியச் செலாவணி மோசடி வழக்கில், வாசன் கண் மருத்துவமனையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தனியார் முதலீட்டு நிறுவனத்துக்கு (செக்குயா) சொந்தமாக, பெங்களூருவில் உள்ள அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

23. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் இலங்கை அரசின் திட்டத்தை, அந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) கடுமையாக விமர்சித்துள்ளது.

24. ஆறு கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மீது தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. வரிசையில் காத்திருக்கத் தேவை யில்லை, சக்கர நாற்காலிகள், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் என பல்வேறு வசதிகள் அவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

25. மேற்கு வங்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து பாராசாத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

26. அரியலுார் : அரியலுாரில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

27. திமுக ஆதரவு தொலைக்காட்சிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கை தொடர்பான விவரங்களை போட்டு, சொன்னீங்களே செஞ்சீங்களா.. என்ற கேள்வியுடன் விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநில இணைச் செயலாளர் வி.ஆர்.திருநாரணன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், திமுகவுக்கு சொந்தமான டிவி சேனல்களில், முதல்வர் ஜெயலலிதா படத்துடன், சொன்னீங்களே.. செஞ்சீங்களா.. என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

28. கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உத்தரவை அமல்படுத்த தமிழக அரசுக்கு ரூ.7,500 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

29. செயற்கைக்கோளை விண்ணில் ஏவி நிலை நிறுத்தும் காலம் வெகு விரைவில் உருவாகும் என திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி சுமித்ரா நேற்று தெரிவித்தார்

30. ஒரு மாநிலத்தில் வறட்சி ஏற்படும் நிலை இருந்தால் அது குறித்து முன்னதாகவே அந்த மாநில அரசை எச்சரிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

31. நியூயார்க் : ''இந்தியா - சீனா நாடுகள் இடையிலான நல்லுறவை, பொருளாதாரம் வழிநடத்திச் செல்கிறது,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

32. ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

33. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ததும் வேட்பாளர் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

34. சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மே 16 ம் தேதி நடக்கும் தேர்தலின் போது அதிமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது.

35. அமெரிக்காவில் வெள்ளம்: இந்திய பெண் என்ஜினீயர் உள்பட 6 பேர் பலி

36. உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கோவை அணி தட்டிச் சென்றது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 அணிகள் கலந்து கொண்டன.

37. வாட்ஸ்ஆப் மூலம் தேச விரோத சக்திகள் தகவல்களை பகிர்வது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

38. ஆப்கனில் தலிபான் தாக்குதல்; 30 பேர் பலி; 200 பேர் காயம்

39. மேற்கு வங்க மாநிலத்தில் சாராய வியாபாரத்தை எதிர்த்துப் போராடிய கல்லூரி மாணவனை கடத்திக் கொலை செய்த வழக்கில், 8 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

40. உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கோவை அணி தட்டிச் சென்றது.

41. World No 1 tennis player Novak Djokovic from Serbia has won the 2016 Laureus Sportsman of the Year Award. He has won it for second time after winning it in 2012.

42. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு சரணாலயத்தில் 114 வகையிலான 10,226 பறவைகள் வருகை தந்துள்ளன.

No comments:

Post a Comment