FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 October 2015

இவண், ஜ.ஜெயராஜ், மாவட்ட தலைவர், Tnptf.

கரூர் வட்டார Jactto தொடர்பாளர் மணிகண்டன் (Testf) உள்ளார். அவர் நமது அமைப்புடன் எந்த தகவல் பரிமாற்றமும் வைக்கவில்லை. நமது வட்டார செயலாளரிடம் பேச மாட்டேன் என்றும், அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார் அதனால் அவரிடம் நான் பேச மாட்டேன் என்று மறுத்ததாலும், நோட்டீஸ் ஆனது 6/10/15 காலை வரை வழங்கப்படாத்தாலும், கரூர் ஒன்றியத்தில் எந்த கூட்டமும் போடாததாலும், பள்ளிதோறும் சென்று ஆசிரியர்களை சந்திக்க எந்த முயற்சியும் செய்யாமல் தலைமை ஆசிரியர் கூட்டத்தோடு முடித்துக் கொண்டதாலும், இதை எல்லாம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதாலும் இது போன்ற முடிவு எடுக்கப்பட்டது தோழர். போராட்டத்திற்கு பயந்த அமைப்பு நமது கிடையாது என்பதை அறிய வேண்டும். நமது ஊதியத்திற்காக மட்டும் அல்ல.. நாட்டின் இறையாண்மையை காக்கவும், ஏழை எளிய பாமர மக்களுக்காகவும் போராடக்கூடிய அமைப்பு. அதனால் தான் செப் 2 வேலை நிறுத்த போராட்டத்தில் திரளாக 180 உறுப்பினர் களில் 150பேர் கலந்து கொண்டு ஊதியத்தை இழந்துள்ளோம். நமது அமைப்பின் கட்டமைப்பு செயல்பாடுகள் குறித்து அறியாமல் கருத்து தெரிவிப்பது தவறு. நமது அமைப்பு செயலாளரை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியது. மேற்கண்ட ஜேக்டோ தொடர்பாளரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவே இந்த முடிவு.
குண்டுகள் நெஞ்சை பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்...
நீதியற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்...
இவண்,
ஜ.ஜெயராஜ்,
மாவட்ட தலைவர்,
Tnptf.

No comments:

Post a Comment