FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 October 2015

துணிந்தால் துணிப்பையும் துணையாகும்: ஆசிரியையின் தூய்மை பணி

''அன்னை நம் பூமியை மாசாக மாற்றினோம்,
தாயான உன்னைத் தான் தரிசாக மாற்றினோம்''
கு.நாட்டாப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி
மாணவர்கள் பாடும் பாட்டு தான் இது. சுற்றுச்
சூழலை பாதுாக்கும் பணியில் ஈடுபடும்
மாணவர்கள், பூமித் தாயின் மேல் பாசம்
கொண்டு எழுதிய பாடல் வரிகள் தான் இவை.
மாணவர்களை சுற்றுச்சூழல் ஆர்வலராக
மாற்றிய பள்ளியின் தமிழ் ஆசிரியை
அலமேலம்மாள் கூறியதாவது: பாடம் நடத்தும்
போது, மாணவர்களிடம் சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்து நிறைய பேசுவேன்.
தலைமை ஆசிரியர் முத்தையா வழிகாட்டுதல்
படி, மாணவர்கள், பெண்கள், நண்பர்களுடன்
இணைந்து 'அப்துல் கலாமின் சிறகுகள்' என்ற,
அமைப்பை துவங்கியுள்ளோம்.வாழ்க்கை கல்வி
வகுப்பில் மாணவர்களுக்கு, வீட்டில் வீணாக
கிடக்கும் ஆடைகளை கொண்டு கை
பைகள்தயாரிக்க பயிற்சி கொடுத்துள்ளோம்.
மாணவர்கள் பாலிதீன் பைகளின் தீமைகள்
குறித்து எடுத்துக்கூறி, கு.நாட்டாப்பட்டி கிராம
கடைகளில் இந்த துணிப் பைகளை கொடுத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஏனென்றால் நாம் பரவலாக செயற்கை இழை
ஆடைகளை தான் அணிகிறோம்.
இதுவும் பாலிதீன் போல மக்காத
தன்மையுடையது. அதனால் தான் இந்த
துணிகளை மறுபயன்பாட்டிற்கு மாற்றி
வருகிறோம். துணிந்தால் துணிப்பையும்
துாய்மைக்கு துணையாகும் என்பதற்கு இது
ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.அதே போல்,
பாலிதீன் பைகளை நாம் பயன்படுத்திய பின்
குப்பைத் தொட்டியில் போடக் கூடாது, சோப்பு
தண்ணீரில் நன்றாக கழுவி மொத்தமாக சேர்த்து
வைத்து எடைக்கு கொடுத்தால் அவர்கள்
மறுசுழற்சிக்கு அனுப்பி விடுவார்கள். பல
கிராமங்களில் எங்கள் சுற்றுச்சூழல் பணியை
துவங்க இருக்கிறோம், என்றார்.
இவரை வாழ்த்த 99942 59653

No comments:

Post a Comment