FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 October 2015

பூட்டை உடைத்து கோபாலபுரம் பள்ளி திறப்பு:

போலீசார் துணையுடன் அதிகாரிகள்
நடவடிக்கை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே
பள்ளிக்கு தலைமை ஆசிரியையால் போடப்பட்ட
பூட்டை போலீசார் துணையுடன் அதிகாரிகள்
உடைத்து திறந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில்
அரசு உதவி பெறும் இந்து ரெட்டி துவக்க பள்ளி
உள்ளது. இங்கு, காலாண்டு விடுமுறைக்கு
பின் பள்ளி தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.
மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன்
திரும்பினர். தலைமை ஆசிரியை பள்ளியை
பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டதாக
கல்வி அதிகாரிகள் காரணம் கூறினர்.
இதை தொடர்ந்து மாணவர்களுக்கு வேறு பள்ளி
ஆசிரியர் மூலம் பள்ளி வராண்டாவில் பாடம்
நடத்தப்பட்டது.பூட்டு உடைப்பு: இது
தொடர்பான செய்தி நேற்று ' தினமலர்
'நாளிதழில் வெளியானது. இதையடுத்து,
நேற்று காலை அந்த பள்ளிக்கு மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர்
முருகேசன், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட
அலுவலர் சங்கரநாராயணன் உடன் வந்த
போலீசார், பள்ளி நிர்வாக கமிட்டியினர்,
ஊர்பெரியவர்கள், ஊராட்சி துணை தலைவர்
திருவேங்கடம், வி.ஏ.ஒ., அழகர்
முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன்
பள்ளியின் பூட்டைஉடைத்து திறக்கப்பட்டது.
இதன் பின் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில்
அமர வைக்கப்பட்டனர். மாற்று பணி ஆசிரியர்
ஜெயசுந்தர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

No comments:

Post a Comment