FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 October 2015

கரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை கண்டித்து " மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ".

கரூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
திரு.ம.வீ.செந்தில்குமார் அவர்கள் பெண்
ஆசிரியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி
மிரட்டும் வகையில் நடந்து கொள்வதற்கு
துறை ரீதியான நடவடிக்கை எடுக்க
வேண்டியும், தொடர்ச்சியாக ஆசிரியர்
விரோத போக்கு, ஆசிரியர்களிடம் பணம்
வசூலித்தல், சர்வாதிகார போக்கு,
செயல்படாத தன்மை, அலுவலகத்தில்
அமராமையை கண்டித்தும், முடங்கிக்
கிடக்கும் கரூர் உதவித் தொடக்கக்கல்வி
அலுவலகத்தின் செயல்படாத தன்மையை
கண்டித்தும் " மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் ".
நாள்- 16.10.15 வெள்ளி மாலை 5.00 மணி.
இடம்- கரூர் Aeeo அலுவலகம் முன்பு.
மேற்கண்ட கோரிக்கை நிறைவேறா விடில்
தொடர் நிகழ்வாக
பிச்சை எடுக்கும் போராட்டம்-30.10.15,
கரூர் Aeeo அலுவலகம் முற்றுகை
போராட்டம்- 10.11.15,
கரூர் Deeo அலுவலகம் முன்பு
போராட்டம்-20.11.15.
" நெஞ்சினை பிறந்த போதும் நீதி கேட்க
அஞ்சிடோம்...
நேர்மையற்ற பேர்களின் கால்களை
வணங்கிடோம்..."
ஆசிரியப் பேரினமே...
அணி திரள்க!
ஆர்த்தெழுக!!
இவண்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி,
கரூர் வட்டாரம் & நகரம் ( கிளைகள்).

No comments:

Post a Comment