FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 October 2015

அரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள,
டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.சென்னை, கோவை,
திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை
ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி
ஆணையர் (சமரசம்) மற்றும் தொழிலாளர்
ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர்
நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், சென்னை
தொழிலாளர் கமிஷனர் அலுவலக வாகன
ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர்
துணை கமிஷனர் அலுவலகம், கோத்தகிரி
தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம்,
ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட
உள்ளனர்.
இப்பதவிக்கு ஓட்டுனர் உரிமத்துடன், இரண்டு
ஆண்டு அனுபவம் உள்ள, எட்டாம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற, தகுதியானவர்களிடம் இருந்து,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, www.labour.tn.gov.in இணைய
தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். சென்னை, தேனாம்பேட்டை;
கோவை வட்டார போக்குவரத்து அலுவலக
வளாகம் பின்புறம்; திருச்சி மான்னார்புரம், காஜா
மியான் தெரு; மதுரை, எல்லீஸ் நகரில்,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடம்
ஆகியவற்றில் உள்ள, தொழிலாளர் இணை
ஆணையர் அலுவலகத்திலும், விண்ணப்பம்
பெற்றுக் கொள்ளலாம்.“பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள், நவ.,6ம் தேதிக்குள்,
சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர
வேண்டும்,” என, தொழிலாளர் ஆணையர்
அமுதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment