FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 September 2015

டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை

டெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம்
செய்யக்கூடாது என, மாணவர்களிடம்
வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
அறிவுறுத்தி உள்ளார். அவரது
அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை
சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறைகளை
சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வகுப்பறை
மற்றும் கழிப்பறையில் தண்ணீர்
தேங்கியிருந்தால், தலைமையாசிரிடம் கூறி
அகற்ற வேண்டும். குடிநீர் பானைகள் மற்றும்
தண்ணீர் தொட்டியை மூடிவைப்பதன்மூலம்,
கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும்.
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த
விழிப்புணர்வை தலைமையாசிரியர்கள்
மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள் அதை பெற்றோரிடம் தெரிவிக்க
வேண்டும். மாணவர்களிடம் கடுமையான
காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால்,
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்க
வேண்டும். பின்னர் சிகிச்சைக்கு அரசு
மருத்துவமனைக்கு செல்ல ஆசிரியர்கள்
அறிவுறுத்த வேண்டும். மாறாக,
சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வலியுறுத்த
வேண்டும்.காலை இறைவணக்கத்தின்போது
வாரத்தில் 3 நாட்கள் அனைத்து மாணவர்களும்
இதுகுறித்து சுய உறுதிமொழி எடுத்துக்கொள்ள
வேண்டும். திருப்பூர், திருச்சி, சேலம், தேனி,
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை
மற்றும் சென்னையின் முதன்மைக்கல்வி மற்றும்
மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்த
வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment